செவ்வாய், 9 ஏப்ரல், 2013

சனி, 23 அக்டோபர், 2010

தமிழ் மென்பொருள்

http://thamizha.com/ekalappai-anjalதமிழ்  மென்பொருள் இ -கலப்பை  டவுன்லோட் செய்ய இங்கு  க்ளிக் செய்யவும்
தமிழ்  மென்பொருள் இ -கலப்பை  மேற்கண்டவாறு  தட்டச்சிசெய்யலாம் .  வோர்ட்-ல்
  t s c  பான்ட் தேர்வு செய்யவும்

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கவிதைகள்

1. மரணம்

அன்னை தந்த உயிரும் உடலும்
ஆண்டுகள் பல பூமியில் வாழ்ந்து
இறைவனின் கட்டளைப்படி இயற்கையின் நியதி
ஈடேறும் பொழுது இன்பம் இல்லாத
உயிர் உடல் பிரிவே - மரணம்.


2 . காதல்

தீயைத் தேடும் விட்டில் நான்
பிறந்தது இறப்பதற்காகவே - அதனால்
காட்சிகொடு நீ கடவுளாய் - அல்ல
காதலியாய்!

3 .ஒரு தார்சாலையின் கனவு

எந்தன் பிள்ளை காக்கைகளே
ஏழுவண்ண வானவில்லில்
ஐந்தை மட்டும் கடனாய்
வாங்கிவாருங்கள்-நீங்களும்
பலவண்ணப் பறவைகளாக பறப்பீர்
பாரதத்தில் நானும் பஞ்சவர்ண
சாலை(சோலை)யாக இருப்பேன்.


4. ஒரு சபதம் செய்வோம்

அண்ணல் காந்தியின் அகிம்சை நாட்டில்
ஆண்டு 2009 ல் ஒரு சபதம் செய்வோம்!
இமயம் முதல் குமரிவரை நம்மை
ஈன்றெடுத்த இந்தியத்தாயின்
உயர்வுகளை உலகினில் உயர்த்துவோம்!
ஊமையாய் இல்லாமல் உணர்ச்சிகள் கொண்டு
எரியும் தீபமாய் எழுச்சிகள் பல காண்போம்!
ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின்
ஐட்ரஜன் குண்டுவால் ஐயமில்லாது வாழ்வோம்!
ஒன்பது கோள்களிலும் ஒவ்வொருவரும்
ஓடிவிளையாடிட ஒரு சபதம் செய்வோம்!
இந்தியனாய் பல சாதனைகள் செய்வோம்!!

கீதாசாரம்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்,
உன்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தா? அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைத்திருக்கிறாயோ,அது இங்கிருந்து எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டாது.
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.